Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹேமந்த் சோரனுக்கு பிணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: சரியாக 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது எதிர்ப்பு குரலை நசுக்குவதற்காக பாஜ அரசு அரங்கேற்றிய அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர் ஒருவரின் முதலமைச்சர் பதவியை பறித்தனர், அவரை 5 மாதங் கள் சிறையில் அடைத்தனர். தேர்தல் பரப்புரை செய்ய விடாமல் தடுத்தனர். இந்நிலையில், அவருக்கு பிணை வழங்கியுள்ள நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். ஹேமந்த் சோரன் மன உறுதியையும், ஜார்க்கண்ட் மக்கள் மீது அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.