Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தவெக அரசின் தோல்வியால் தான் தமிழகத்தில் GST வருவாய் சரிவு.. டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி (GST) வருவாய் சரிவு குறித்து பல்வேறு எதிர் கட்சி தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அக்டோபர் 2026-ல் தமிழ்நாட்டின் மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய் வெறும் 3% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

இது தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் மாத நிலவரப்படி, கேரளா (23%), ஆந்திரா (24%), கர்நாடகா (18%), தெலுங்கானா (14%) போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு 3% வளர்ச்சியுடன் பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "கடந்த ஆறு மாதங்களாகத்தான் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதன் விளைவாகவே மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் சரிந்துள்ளது; நிர்வாக திறன் இல்லாத தவெக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மற்றும் பெரிய ஆலைகள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

நிலைமை இப்படியிருக்கையில், மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் எப்படி மேம்படும் என கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் உற்பத்தி குறைந்துவிட்டது; மக்களின் வாங்கும் திறனும் சரிந்துவிட்டது. இது முழுக்க முழுக்க இந்த தவெக அரசின் தோல்வியால் தான் நிகழ்ந்துள்ளது " என்று கடுமையாக சாடி உள்ளார்.