Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காவிரி விவகாரம் - அகந்தையால் உங்களுக்கு மட்டுமில்ல தமிழகத்திற்கும் சேர்த்து அவமானம்... அப்பாவு கண்டனம்

சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மதிக்காமல், ஆணவத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் முதல்வர் விஜய், என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக சாடி உள்ளார்.

2 மாதத்திற்கு முன்பே உச்சநீதிமன்றம் சென்று காவிரி நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தான்தோன்றித்தனமாக செயல்பட்டு நானே நேரில் சென்று கர்நாடக முதல்வரை சந்திக்கிறேன் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால் அவர்களோ இப்போது இங்கு நிலைமை சரியில்லை, எனவே நீங்கள் திட்டமிட்ட தேதியில் வராதீர்கள், நிலைமை சீரான பின் வேறொரு தேதியில் சந்திக்கலாம் என்று கூறி விட்டார்கள்.

இதன் மூலம் தனது அகந்தையால் தான் அவமானப்பட்டதோடு இல்லாமல், தமிழ்நாட்டையும் சேர்த்து அவமானப்படுத்தி விட்டார் முதல்வர் விஜய் என்று விமர்சித்து உள்ளார். மேலும் காவிரி விவாகரத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், ஆட்சியை தக்கவைக்கிறேன் என்று பிற கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதிலேயே காலத்தை கடத்தி விட்டீர்களே CM சார்.! எனவும் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார். காவிரி படுகையில் உங்கள் நண்பர் ஜனார்த்தன ரெட்டி மணல் எடுப்பதற்காக காவிரி படுகையையே காய வைத்து விட்டீர்களா CM சார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அப்பாவு.