உதவி ஆய்வாளர் காவல் நிலையங்கள் ஆய்வாளர் காவல் நிலையங்களாக தரம் உயர்வு
06:44 PM Aug 04, 2025 IST
சென்னை: 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும். குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும், சட்டம் ஒழுங்கு, சாதி, வகுப்புவாத பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் முடியும்.