Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 2024ல் 1,66,337 பயனர்கள் பதிவு

காவல்துறை மானிய கோரிக்கையின் போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய இணையவழி குற்றங்கள் மற்றும் உதவி எண்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் ‘காவல் உதவி செயலி’ பெண்களுக்கு உதவுவதற்காக பிரபலப்படுத்தப்பட்டு, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் 1,64,337 பயனர்கள் காவல் உதவி செயலியில் பதிவு செய்துள்ளனர். 649 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.