ரியோ டி ஜெனிரோ: பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவின் புறநகர் பகுதிகளில் சட்ட விரோத போதை கடத்தல் கும்பல்களை ஒழிக்கும் வகையில் போலீசார் மிக பெரிய நடவடிக்கை எடுத்தனர். போலீசாரும், சிறப்பு படையினரும் இணைந்து சில நாட்களாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில்,121 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 4 பேர் போலீஸ் அதிகாரிகள். இதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியோ டி ஜெனிரோவின் பென்ஹா என்ற இடத்தில் ஒரே இடத்தில் 70 உடல்கள் கிடந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பிரேசில் அதிபர் லுாயிஸ் இன்னாசியோ லுலா டா சில்வா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், ‘ போதை கடத்தல் கும்பல்களால் சாதாரண குடும்பங்கள் சீரழிவதை அனுமதிக்க முடியாது ’ என குறிப்பிட்டுள்ளார்.
