டெல்லி: ஒருவரை விசாரணைக்கு என்று போலீஸ் பிடித்துச் சென்றாலே கைது என்றுதான் பொருள் என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. போலீசால் பிடித்து செல்லப்பட்ட 24 மணி நேரத்துக்குள் குறிப்பிட்ட நபரை நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். பிடித்து போலீஸ் கட்டுப்பாட்டில் வைப்பவரையும் முறைப்படி கைது செய்பவரையும் வேறுபடுத்துவது செயற்கையானது. போலீஸ் கட்டுப்பாட்டில் வைப்பதையும் கைது செய்வதையும் வேறு வேறானவை என்பது அரசியல் சட்டப்படி செல்லாது. கைது நடைமுறை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் சந்துர்கர் அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
+
Advertisement


