காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கி அரசாணை பிறப்பித்த முதலமைச்சரின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
மதுரை : காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கி அரசாணை பிறப்பித்த முதலமைச்சரின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவலர்களின் உடல்நலம் மனநலத்தை பேணும் வகையில் வார விடுப்பு வழங்கி முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.


