Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தமிழகத்தில் மேலும் 6 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி

சென்னை: போக்சோ வழக்குகளை விரிவாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக கூடுதலாக 6 புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் சுமார் 18,600-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை, விரைவாக விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் நடப்பாண்டு ஜூன் 25-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் சுமார் 18,675 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவில் தென்காசி, ஈரோடு, திருப்பூர், திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா ஒரு புதிய நீதிமன்றமும், சென்னையில் கூடுதலாக ஒரு போக்சோ சிறப்பு நீதிமன்றமும் என, மொத்தம் ஆறு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. அதே போல தற்போது செயல்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றங்களில் 4 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதும் அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.