Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பிரதமர் மோடி ஜூலையில் ரஷ்யா பயணம்?

புதுடெல்லி: பிரதமர் மோடி அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. மோடியின் ரஷ்ய பயணம் தொடர்பாக கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் கூறியதாக ரஷ்ய ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்தியில், “மோடியின் ரஷ்ய பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளன. ஆனால் இந்த பயணம் குறித்து இந்தியா தரப்பில் எந்த உறுதியான தகவல்களும் வௌியாகவில்லை. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ரஷ்யா வரும்படி மோடிக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.