ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (31). ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், ஈரோடு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியும், தனிமையில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்து, பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த குழந்தைகள் நலக்குழுவினர் கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து அலாவுதீனை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை, குழந்தைகள் நல குழுவினர் தனித்தனியே மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதன்முடிவில், பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தலின்பேரில், ஆசிரியர் அலாவுதீன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.