Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மக்கள் பணம் ரூ.5000 கோடி கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூயசக்தி முதல்வருக்கும் என்ன தொடர்பு..? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சென்னை: தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் நடத்தி மக்கள் பணம் ரூ.5000 கோடியை கொள்ளை அடித்த பிஎல்எம் பிரேம்குமாருக்கும், தூயசக்தி முதல்வருக்கும் என்ன தொடர்பு என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு:

ரூ.5 ஆயிரம் கோடி மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பிஎல்எம் பிரேம்குமாருக்கும் தூயசக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் டம்மி சிம்-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.கவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.

பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?. அப்படி எந்த “விவகாரமான” தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும், கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?. எம்எல்ஏக்களை பர்ேசஸ் செய்வது, சோபா அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?. இதையெல்லாம் சிபிஐ, எஸ்எப்ஐஓ, இ.டி போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

எம்எல்ஏக்களை பர்சேஸ் செய்வது, சோபா அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?