பஜாஜ் ஆட்டோ நிறுவனம், டிரையம்ப் 350 மோட்டார் சைக்கிளை வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின்படி 350 சிசிக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு 40 சதவீத வரியும், 350 சிசிக்கு கீழ் உள்ள பைக்குகளுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. டிரையம்ப் 350 பைக்கில் 350 சிசிக்கு குறைவான இன்ஜின் இருப்பதால், போட்டி விலையில் வழங்க முடியும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. தற்போதுள்ள டிரையம்ப் 400ல் 399 சிசி இன்ஜின் உள்ளது. இது 40 எச்பி பவரையும், 37.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதை விட 3 முதல் 5 எச்பி குறைவாக டிரையம்ப் 350 வெளிப்படுத்தும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
+
Advertisement


