தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 7 மாடிகள் கொண்ட வணிக வளாகம்: புதிய திட்டம் தயார்

 

Advertisement

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது வருவாயைப் பெருக்கும் வகையில், அரும்பாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய மெட்ரோ நிலையங்களை ஒட்டி பிரம்மாண்ட 7 மாடி வணிக வளாகங்களையும், 12 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வணிக மையங்களையும் கட்டத் திட்டமிட்டுள்ளது. சென்னை நகர மக்களின் அன்றாடப் பயணத்தில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், பயணிகள் போக்குவரத்தை தாண்டி, தனது வருவாயை உயர்த்தவும், பொதுமக்களுக்கான வணிக வாய்ப்புகளை பெருக்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே புதிய 7 மாடி வணிக வளாகம் ஒன்றை அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஆலந்தூர், சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய மெட்ரோ நிலையங்களின் அருகில் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டும், திட்டமிடப்பட்டும் வரும் நிலையில், தற்போது அரும்பாக்கம் பகுதியும் இந்த வரிசையில் இணையவுள்ளது.அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 17,872 சதுர அடி நிலப்பரப்பில் இந்த புதிய வணிக வளாகம் அமையவுள்ளது. மொத்தம் 34,206 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த 7 மாடி கட்டிடத்தில் அலுவலகங்கள், வணிகக் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட வாய்ப்புள்ளது.

இங்கு வரும் வாகனங்களின் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், அடித்தளம் மற்றும் தரைத்தளத்தில் 4 அடுக்குகள் கொண்ட நவீன எந்திரவியல் கார் நிறுத்தும் வசதியும் அமைக்கப்படவுள்ளது. இந்த இடம் ஒருபுறம் ஜவஹர்லால் நேரு சாலையையும், மறுபுறம் கூவம் நதியையும் ஒட்டி அமைந்துள்ளதுடன், குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் வணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் பாதைகளை ஒட்டியுள்ள சொந்த நிலங்களை பயன்படுத்தி கூடுதல் வருவாய் ஈட்டுவதே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். இதன்படி, மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளில் பாதை 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் சுமார் 12 லட்சம் சதுர அடி பரப்பளவில் வணிக மையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மந்தைவெளி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் இதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும், செம்பியம், பெரம்பூர் பேரக்ஸ், புரசைவாக்கம், சேத்பட், போட் கிளப், கச்சேரி சாலை மற்றும் ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் இத்தகைய மையங்கள் அமையவுள்ளன. முதல்கட்ட மெட்ரோ நிலையங்களில் அமைக்கப்பட்ட சில வணிக வளாகங்களில் மக்களின் வருகை குறைவாக இருந்ததால், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முன்னாள் இயக்குநர் ராமநாதன் கூறுகையில், ‘மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணச்சீட்டு விற்பனை மூலம் மட்டுமே வரும் வருமானத்தை நம்பி இயங்க முடியாது. வணிக வளாகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் முக்கியமானது. 2ம் கட்டத் திட்டம் முழுமையாக செயல்பட்டு, நகரின் பல பகுதிகளை இணைக்கும் போது, பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்; வணிக மையங்களுக்கான வரவேற்பும் கணிசமாக உயரும்,’ என்றார்.

இதுகுறித்து நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர் கமலக்கண்ணன் கூறுகையில், ‘இந்த வணிக வளாகம் செயல்படத் தொடங்கும் போது, அப்பகுதிகளுக்கு சொந்த வாகனங்களில் வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முறையான வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் தனி வழிகளை அமைப்பது மிகவும் அவசியம்,’ என்றார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, பயணிகளுக்குப் பயனுள்ள பொது இடங்களை உருவாக்குவதுடன், சென்னை மாநகரின் வர்த்தக வளர்ச்சிக்கும் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News