கேஎன்கே கார்ட்ஸ் நிறுவனம், பிட்புல் 1.0 மினி பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 80 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 4 எச்பி பவரை வெளிப்படுத்தும். மொபெட் போன்று இதில் கியர் எதுவும் கிடையாது. இரண்டு புறமும் சிங்கிள் சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளது. விலை ரூ.50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் சாலைகளில் ஓட்டுவதற்கானதல்ல. வளாகங்களுக்குள் அல்லது பண்ணை வீடுகள் போன்றவற்றுக்குள் ஓட்டுவதற்காக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
+


