Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

விருப்ப மனுக்கள் மூலம் 15 சி கட்சிக்கு கொண்டு வந்த இலைக்கட்சி தலைவரின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சிறுபான்மை ஓட்டு சிதறலை தடுக்க யூனியனில் புதுவியூகம் நடத்துறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘புதுவித அரசியல் கூத்துகள் அரங்கேறும் யூனியனான புதுச்சேரியில் தேர்தல் ஜுரம் பற்றியுள்ளதாம்.. வெளிமாநிலத்தவர் படையெடுத்து ஆள்பிடிப்பு வேலையில் இறங்கியிருக்க ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய கட்சிகள் வேட்பாளர்களுக்கு ஆளில்லாமல் திண்டாடும் நிலையை உருவாக்க திட்டம் வகுத்து உள்ளார்களாம்.. குறிப்பாக மலராத கட்சியின் பி-டீம்மாக செயல்படும் தொழிலதிபர் மற்றும் நடிகரின் கட்சிகள், தொகுதி வாரியாக ஆள்பிடிப்பு வேலைகளை நடத்தி முடித்து விட்டதாம்.. எப்படியாவது மதச்சார்பற்ற அணியில் பிளவை ஏற்படுத்தி, சிறுபான்மை ஓட்டுகளை சிதறடிக்க வேண்டுமென்பதில் மலராத கட்சி முனைப்பு காட்டுவதால் இடதுசாரி, கை உள்ளிட்ட கட்சிகள் உஷாராகி வருகிறதாம்.. மலராத கட்சியிடம் விலைபோய் இருக்கும் சில கறுப்பாடுகளை கண்டறிய புதுவியூகம் ெரடியாகி இருக்கிறதாம்.. இதனால் உள்கட்சி தகவல்களை கசியவிட்டு சேம் சைடு கோல் அடிக்கும் நபர்கள் அடுத்தடுத்து சிக்க வாய்ப்புள்ளதாம்.. அத்தோடு சிறுபான்மை வாக்குகளை சிதறவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் நேரடி சந்திப்புகளை நடத்துறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாயுள்ளம் கொண்ட அதிகாரியால ஜெயில் வார்டர்கள் ரொம்பவே ஹேப்பியா இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் வார்டர் முதல் ஆபீசர்ஸ் வரை எல்லோரும் ரொம்பவே ேஹப்பியா இருக்காங்களாம்.. இதற்கான காரணம் பெருசா இருக்குதாம்.. அரியானாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, ரெண்டு வருஷம் ஜெயிலை ஆட்டி படைச்சிட்டாராம்.. 9 மத்திய சிறைகளில் பணியாற்றி வரும் வார்டர்கள் குறைந்தது 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஒரே இடத்தில் கொட்டாய் அமைத்து வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாங்களாம்.. அந்த அதிகாரி பொறுப்பேற்றவுடன் டிபார்ட்மெண்டில் நடக்கும் தவறுகள் எவ்வாறு நடக்குதுன்னு பார்த்திருக்காரு.. நீண்டநாட்களாக இருப்போரை மாற்றினால் ஏதாவது நல்லது நடக்குமுன்னு முடிவு செஞ்சியிருக்காரு.. இதன்படி புழல் ஜெயிலில் இருப்போரை தென்மாவட்ட ஜெயில்களுக்கும், அங்கிருப்போரை மத்திய மண்டல ஜெயில்களுக்கும் அதிரடியா மாத்தியிருக்காரு.. சேலம் ஜெயிலில் இருந்து மதுரை, கடலூர் உள்ளிட்ட சிறைக்கு மாற்றப்பட்டிருக்காங்க.. ஒவ்வொரு ஜெயிலுக்கும் குறைந்தது 90 பேர் தூக்கப்பட்டுட்டாங்களாம்.. ஏராளமானோர் குடும்பத்தை விட்டுட்டு தவித்துக்கிட்டே இன்னும் இருக்காங்களாம்.. குறிப்பாக ஆபீசர்ஸ் சம்பாதிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுட்டாம்.. கைகாசை போட்டு பிழைப்பை ஓட்டும் நிலைக்கு எல்லோரும் வந்துட்டாங்களாம்... இதனால் அந்த அதிகாரியின் மாற்றம் எப்போது வரும் என்ற ஏக்கத்துடனேயே இருந்தாங்களாம்.. இந்நிலையில் அந்த ஐபிஎஸ் அதிகாரி, மாநில சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுட்டாராம்.. அவர் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளவருன்னும் சொல்றாங்க.. இதற்கிடையில் எல்லோரிடமும் நல்லபெயர் எடுத்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐபிஎஸ் அதிகாரி ஜெயில் டிபார்ட்மெண்டுக்கு அதிகாரியா பொறுப்பேத்துக் கிட்டாராம்.. அவரிடம் பொது இடமாறுதலுக்கு கடிதம் கொடுக்க பாதிக்கப்பட்ட வார்டர்கள் தயாரா இருக்காங்களாம்.. அந்த அதிகாரியும் தாயுள்ளம் கொண்டவர் என்பதால் இடமாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்காங்களாம் ஜெயில் வார்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பட்டியலை தயாரா வச்சிக்கிட்டே நேர்காணல் நடத்தப்போறாராமே இலைக்கட்சி தலைவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியின் கடும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் மக்களை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் இலைக்கட்சி தலைவரு.. இப்படி சுமுகமாக போய்கிட்டிருந்த அவரது பயணத்திற்கு புதுக்கட்சி தொடங்கிய நடிகர் பிரேக் போட்டாராம்.. கரூரில் நடிகர் நடத்திய கூட்டத்துல 41 பேரை கொன்று குவித்த நிலையில் சுற்றுப்பயணம் நிறுத்தப்பட்டதாம்.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவர் வேட்பாளர்களையும் தேர்வு செஞ்சி வச்சிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. கட்சியை கைக்குள் கொண்டு வந்திருந்தாலும், ஆங்காங்கே எதிர்ப்பு குரலும் எழும்புதாம்.. ஆனால் எதிர்ப்புக்கு ஒரு நபர்கூட இல்லாத நிலையை கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் இறங்கிட்டாராம் இலைக்கட்சி தலைவர்.. தமிழ்நாடு முழுவதும் தன் மீது உயிராக இருக்கும் 100 பேரை வேட்பாளர் பட்டியலில் கொண்டு வந்திருக்காராம்.. எதைச்சொன்னாலும் தஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டுவது தான் அவர்களின் முதல் தகுதியாம்.. இவ்வாறு 100 பேரை அவரது சன் தலைமையிலான டீம் தேர்வு செஞ்சி வச்சிருக்காம்.. அவர்களின் பின்னணி குறித்த தகவலையும் ரகசியமாக எடுத்து வச்சிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இலைக் கட்சியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 165 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தாலும் மீதமுள்ள 65 தொகுதிகளில் இலைக்கட்சியின் செல்வாக்குள்ள ரெண்டாங்கட்ட தலைவர்களுக்கு ஒதுக்கப்படுமாம்.. ஆனால் தொண்டர்களை ஏமாற்றும் வகையில் விருப்பமனு கொடுக்குமாறு வற்புறுத்தி 15 கோடி ரூபாயை கட்சி பக்கம் கொண்டு வந்திருக்காராம் இலைக்கட்சி தலைவர்.. இவரது தந்திரத்தை புரிந்துகொள்ளாத ரத்தத்தின் ரத்தங்களோ இலைக்கட்சி தலைவரை நம்பிக்கிட்டிருக்காங்களாம்.. அதே நேரத்தில் நேர்காணல் ஒன்றையும் நடத்தி அவர்களை ஏமாத்தப் போறதாகவும் விவரம் தெரிந்தவர்கள் சொல்றாங்க.. இந்த நாடகத்தை முடித்துக்கொண்ட பிறகு வேட்பாளர் அறிவிப்பு நடக்குமாம்... மம்மியோட பிறந்த நாளன்று தயாராக வைத்திருக்கும் பட்டியலை அறிவிக்கபோறாராம் இலைக்கட்சி தலைவர்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.