Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை `சஸ்பெண்ட்’

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில், கடந்த 2013ம் ஆண்டு தனலட்சுமி என்பவர் இணை பேராசிரியையாக பணியில் சேர்ந்தார். 2016 முதல் பேராசிரியையாக பதவிஉயர்வு பெற்று பணிபுரிந்து வந்தார். இதனிடையே, தனலட்சுமி பணியில் சேர்ந்தபோது அளித்த பணிஅனுபவ சான்றிதழில் முரண்பாடுகள் இருப்பதாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேராசிரியை தனலட்சுமி, நேர்காணலின் போது இணை பேராசிரியர் பணிக்கான போதுமான அனுபவம் இல்லாத சான்றிதழை சமர்ப்பித்திருப்பது தெரியவந்தது.

அதேசமயம், பணியில் சேர்ந்த பிறகு, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருப்பதாக, மற்றொரு சான்றிதழை சமர்பித்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, விசாரணையின் அறிக்கை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு வழங்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அவர், சம்பந்தப்பட்ட பேராசிரியை தனலட்சுமியை `சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளார்.