Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரியாரின் அறிவுலகம் தான் இன்றும் என்றும் தேவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: பெரியாரின் அறிவுலகம் தான் இன்றும் என்றும் தேவை, என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழா அறிவு கொள், பகுத்தறிவைப் பயன்படுத்து. அறிவுதான் இறுதியில் வெல்லும், உறுதியாய் வெல்லும், என்று சொன்ன பெரியாரின் அறிவுலகம் தான் இன்றும் என்றும் தேவை.

பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க்கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன். பெரியாரும், பெரியாரின் பெருந்தொண்டர்களும் பாடுபட்டு உருவாக்கிய அறிவுலகமான தமிழ்நாட்டில், அவதூறுகள், பொய்கள், போலி வீடியோக்கள் என ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பது Healthy Politics அல்ல, Filthy Politics.

நமது Phoneகளுக்கு பரப்பப்படும் Messageகளும், Influencer Videoக்களும் தகவல்கள் மட்டும் தான், தகவலைத் தெரிந்து கொள்வதற்கும், உண்மையைப் புரிந்து கொள்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. அதற்கான அறிவியல் பார்வை தழைத்து, பெரியார் கண்ட அறிவுலகம் நிலைக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.