Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோல்: காஞ்சி கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி அளித்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருக்கு ஊன்றுகோலை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

பிரதி திங்கட்கிழமைதோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 283 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ரஜினி, அளித்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கலெக்டர் அவருக்கு ஊன்றுகோல் வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.