தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூர் : தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கூடலூர் வட்டக் கிளையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

கூடலூர் வட்டக்கிளை தலைவர் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிவகாசியில் நடைபெற்ற மாநில மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின்படி 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பிடித்தம் செய்வதை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், போன்ற தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களுக்கு ரூ.7850-ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத வேலை நிறுத்த காலத்தை வரன்முறை செய்ய வேண்டும். ஒன்றிய அரசு வழங்கிய 3% சதவீத அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

செயலாளர் விஷ்ணு தாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய சங்க தலைவர் கேட்பெரே மேத்யூ, போக்குவரத்து சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தபால்துறை சங்க பொறுப்பாளர் முத்துசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் வாழ்த்தினர்.

ஓய்வூதியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் நிறைவுரையாற்றினார். வட்டக் கிளை துணைத்தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement