Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழநி அருகே அதிகாலையில் மளிகை கடை கதவை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் திருட்டு

பழநி: பழநி அருகே இன்று அதிகாலை மளிகை கடை கதவை உடைத்து, ரூ.60 ஆயிரம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே காவலப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சபரிநாதன்(35). அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை இவரது கடையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் சபரிநாதன் விரைந்து வந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடுபோனதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அதிகாலையில் மர்ம நபர்கள் கடை கதவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரொக்க பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதேபோல அருகே உள்ள காளிதாஸ், சுப்பிரமணி ஆகியோரது மளிகை கடைகளின் கதவுகளையும் மர்ம நபர்கள் உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால், அந்த கடைகளில் பணம் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். இந்த கடைகளில் பொருட்கள் ஏதேனும் திருடுபோனதா, இல்லையா என தெரியவில்லை.

இதுகுறித்து சபரிநாதன் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்தில் பழநி தாலுகா போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து, திருட்டில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வருகின்றனர். அடுத்தடுத்து 3 கடைகளில் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.