Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கடந்த மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 24 சதவீதம் அதிகரிப்பு!

பயணிகள் வாகன விற்பனை கடந்த மே மாதத்தில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது, வாகன் இணையதள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மே மாதத்துக்கான வாகன விற்பனை விவரங்கள், வாகன பதிவு இணையதளமான வாகன் இணையதளம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன்படி, கடந்த மே மாதத்தில், இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் டாப் 15 நிறுவனங்கள் தயாரிக்கும் 3,97,301 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இது முந்தைய ஆண்டு மே மாதத்தில் 3,20,612 ஆக இருந்தது. இது 23.9 சதவீத வளர்ச்சியாகும். இருப்பினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், விற்பனை 5.4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 4,20,112 கார்கள் விற்பனை ஆகியிருந்தன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33.2 சதவீத வளர்ச்சியாகும். விற்பனை எண்ணிக்கையில் வழக்கம் போல் மாருதி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

டாப் 15 கார் உற்பத்தி நிறுவனங்களில், கடந்த மே மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் 1,65,441 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுபோல், டாடா நிறுவனத்தின் 54,151 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இது 39.3 சதவீத வளர்ச்சியாகும். அடுத்ததாக 51,745 கார்களை விற்பனை செய்து

மூன்றாவது இடத்தை மகிந்திரா நிறுவனம் பிடித்துள்ளது. இது 7.8 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

ஹூண்டாய் நிறுவனம் 46,223 கார்கள் விற்பனை செய்து 12.8 சதவீத வளர்ச்சியை பதிவு செ்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 6.2 சதவீதம் உயர்ந்து 26,415 ஆகவும், கியா கார்கள் விற்பனை 33.6 சதவீதம் உயர்ந்து 24,647 ஆகவும் உள்ளன.

இதுபோல் ரெனால்ட் 4,217 கார்கள் (70.6 சதவீத வளர்ச்சி), நிசான் 2,959 கார்கள் (84.4 சதவீதம்), பிஒய்டி 686 கார்கள் (10.5 சதவீதம்), சிட்ரான் 643 (49.2 சதவீதம்) விற்பனை ஆகியுள்ளன. இதுதவிர ஸ்கோடா, போக்ஸ்வேகன் 8,377 கார்கள், எம்ஜி 5,862 கார்கள், ஹோண்டா 4,489 கார்கள், ஜீப் 301 வாகனங்கள் விற்பனை செய்துள்ளன என வாகன விற்பனை இணையதள புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்சான் காருக்கு நடப்பு மாதத்துக்கான தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, நெக்சான் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரை சலுகை கிடைக்கும். இதில் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி மற்றும் இதர தள்ளுபடிகள் ரூ.25,000 உள்ளிட்டவை அடங்கம். நெச்சான் சிஎன்ஜிக்கும் இதே தள்ளுபடி உண்டு. ஆனால், டீசல்வேரியண்டுக்கு இல்லை. இதுபோல், எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.15,000 அல்லது பழைய கார் ஸ்கிரேப் திட்டத்தில் ரூ.20,000 மதிப்பிலான சலுகைகள் அனைத்து வேரியண்டுகளின் மீதும் பெறலாம். மேலும், ரூ.5,000 கார்ப்பொரேட் தள்ளுபடியும் நிபந்தனைகளுக்கு ஏற்ப கிடைக்கும். நெக்சான் ஷோரூம் விலை சுமார் ரூ.7.37 லட்சம் முதல் ரூ.14.02 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*இதுபோல், டாடா கர்வ் காருக்கு ரூ.55,000 வரை கிடைக்கும். ஹாரியர் மற்றும் சபாரி கார்களுக்கு ரூ.45,000 வரையிலும் , அல்ட்ராஸ் காருக்கு ரூ.40,000 வரையிலும் , டியாகோவுக்கு ரூ.35,000 வரையிலும் டிகோர் காருக்கு ரூ.30,000 வரையிலும் தள்ளுபடி கிடைக்கும்.