கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு (சயாம்) வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 4,37,312 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் இது 3,48,847 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 25.4 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை கடந்த மாதத்தில் 65,668 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு ஏப்ரலில் இது 49,441 ஆக இருந்தது இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 32.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
டூவீலர்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஏப்ரலில் 18,72,691 டூவீலர்கள் விற்பனை ஆகியிருந்தன. கடந்த ஏப்ரலில் இது 28.4 சதவீதம் உயர்ந்து 14,58,784 டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அளவில் பயணிகள் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் உள்ளிட்டவை சேர்த்து 29,22,427 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
மூன்று சக்கர வாகனங்களை பொறுத்தவரை, 52,655 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 31.1 சதவீத வளர்ச்சியாகும். இதுபோல், இந்த பிரிவில் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் விற்பனை 45.1 சதவீதமாகவும், இ-கார்ட்கள் விற்பனை 55 சதவீதம் உயர்ந்து 479 ஆகவும் உயர்ந்துள்ளது. எலெக்ட்ரிக் ரிக்ஷாக்கள் விற்பனை 12.3 சதவீதம் சரிந்து 728 மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.
டூவீலர்களை பொறுத்தவரை ஸ்கூட்டர் விற்பனை 26.2 சதவீதம் உயர்ந்து 6,91,993 வாகனங்களும், மோட்டார் சைக்கிள் விற்பனை 30.6 சதவீதம் அதிகரித்து 11,38,452 வாகனங்களும், மொபெட்கள் விற்பனை 9 சதவீதம் உயர்ந்து 42,246 ஆகவும் உள்ளன என சயாம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல், கடந்த நிதியாண்டின் 4ம் காலாண்டை பொறுத்தவரை பயணிகள் வாகன விற்பனை 13.2 சதவீதம் உயர்ந்து 13.16 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. டூவீலர்கள் விற்பனை 26.4 சதவீதம் உயர்ந்து 57.73 லட்சம் வாகனங்களும், டூவீலர்கள் 10.7 சதவீதம் அதிகரித்து 2.17 கோடி வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டள்ள என சயாம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


