Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

2021ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் எழுப்பிய 207 கேள்விகள் நிராகரிப்பு: திரிணாமுல் எம்பி டெரக் ஓ பிரைன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மூத்த காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி செப்டம்பர் 2020ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2025ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் 120கேள்விகள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்து இருந்தார். இதேபோல் எம்பி விவேக் டங்கா மாநிலங்களவையில் 90கேள்விகளை சமர்ப்பித்ததாகவும் ஆனால் 10க்கும் குறைவான கேள்விகளுக்கு மட்டுமே பதிலை பெற்றதாகவும் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டெரக் ஓ பிரைன் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மார்ச் முதல் ஜூலை வரை ஒன்றிய அரசு ஒவ்வொரு நிமிடமும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு தடை உத்தரவுகளை அனுப்பியது. 2021ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய 207 கேள்விகள் நிராகரிக்கப்பட்டன. தீவிரவாத தாக்குதல்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை இழப்புகள் வரை பல்வேறு தலைப்புகளில் இந்த கேள்விகள் இருந்தன ” என்று தெரிவித்துள்ளார்.