Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் 7வது தொகுதியில் அனைத்து கட்சிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நேற்று நடைப்பெற்றது. கட்சி வேறுபாடினின்றி அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு வேட்பாளர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு தகுதி பெறுவார்கள். இந்நிலையில் இந்த தேர்தலில் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அமெரிக்கரான பிரமிளா ஜெயபால் 83.3 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் காவல் அதிகாரியும், தொழிலதிபருமான குடியரசு கட்சியை சேர்ந்த நீரவ் சேத் 10.8 சதவீத வாக்குகளுடன் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரமிளா ஜெயபால் கடந்த 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்க பெண் என்ற பெருமையை கொண்டவர்.

சென்னையில் பிறந்த பிரமிளா தனது 16வயதில் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக அமெரிக்கா வந்தார். இதேபோல் அகமதாபாத்தில் பிறந்து வளர்ந்த சேத் 2008ம் ஆண்டு கணினி மற்றும் மின் பொறியியல் மாணவராக அமெரிக்காவிற்கு வந்தார். பின்னர் 2011ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் விமான மெக்கானிக்காக சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.