Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது: திருச்சி சிவா

டெல்லி: நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு ஆளும் பாஜக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவை விதி 238ன் படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களையும் விவாதிக்கலாம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கலாம் என முன்னாள் மாநிலங்களவை தலைவர் தன்கர் உத்தரவிட்டுள்ளார். "தன்கர் வழங்கிய உத்தரவு இன்னும் நிலுவையில் உள்ளது, உத்தரவு ரத்தாகும் வரை அனைத்தையும் விவாதிக்க அனுமதியுள்ளது என கூறியுள்ளார்.