Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோடு: தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: அன்னபூர்ணா உரிமையாளர் பணிவோடு எழுந்து மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த விதமான ஒரு உணர்வும் இல்லாமல் கல்லைப்போல உட்கார்த்திருக்கிறார்.

ஆகவே மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் தன்மை நிர்மலா சீதாராமனுக்கு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்த நடவடிக்கையானது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் வணிகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் பாஜவுக்கு எதிராக திரும்பி உள்ளது. வருகிற நாட்களில் இது இன்னும் பெரிய விஷயமாக மாறும் என்று கருதுகிறேன். தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட அளவு மக்களின் வாக்கு வங்கியை வைத்திருக்கும் திருமாவளவன் ஆட்சியில் பங்கு என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லா கட்சிகளுக்கும் சீமானுக்கும்கூட அந்த ஆசை உள்ளது. சீமானுக்கு இருக்கிற ஆசையை பார்த்தால் கேரளாவைகூட ஆள வேண்டும் என்று நினைக்கிறார். கையில் அதிகாரம் வேண்டும் என்பதற்காகத்தான் எல்லா கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் ஆட்சியில் பங்கு என்பது 2026 தேர்தலில் அது சாத்தியமாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

* எச்.ராஜா காலாவதியானவர்

ராகுல்காந்தி குறித்து பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கூறியது குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘எச்.ராஜா ஓய்வுபெற வேண்டியவர். அண்ணாமலை வெளிநாடு போனதால் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட வெற்றி பெற முடியாத மக்கள் விரோதி. அவர் சொல்வதற்கும் எல்லாம் பதில் சொன்னால் கஷ்டமாகிவிடும். ஆனால் அவர் பாஷையில் பதில் சொல்ல வேண்டும் என்பது என ஆசை. ஆனால் எனக்கு அந்த பாஷை வராது. என்னை பொருத்தவரை எச்.ராஜா காலாவதியானவர்’’ என்று காட்டமாக பதிலளித்தார்.