Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரங்கிமலை - சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை 7ம் தேதி முதல் தொடக்கம்

சென்னை: சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொகிறார்கள். இந்தநிலையை சமாளிக்க, ரெயில்வே நிர்வாகத்துடன் நடை பெற்ற ஆலோசனைப்படி சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் "ஷட்டில் மின்சார சேவைகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவைகள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பரங்கிமலை - சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் வருகிற 5-ந்தேதி பாதுகாப்பு கமிஷனர் சோதனை மேற்கொள்கிறார். வருகிற 7-ந்தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தின் 10-வது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்குள் ரெயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.