Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பலன்களை அள்ளிக் கொடுக்கும் பரங்கி விதை

ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விதைகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. விதைகள் மிகச்சிறப்பான ஸ்நாக்ஸ் ஆகும். விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு எத்தனையோ விதைகள் உள்ளன. பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆளிவிதைகள், எள்ளுவிதைகள், சியா விதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதிலும் விதைகள் பெரும்பாலும் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய அங்கம் வகிப்பவை. குறிப்பாக மாதவிடாய் கால மனநிலை மாற்றங்கள், மன அழுத்தம், சீரற்ற மாதவிடாய், மகப்பேறு காரணமாக உண்டாகும் கால்சியம் இழப்பு, உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு பூசணி விதை வரம் எனலாம். இந்த ஒவ்வொரு விதைகளிலுமே நாம் நினைத்திராத அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது. அதில் பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.பூசணி விதைகளில் மெக்னீசியம், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் போதுமான அளவில்

நிறைந்துள்ளது.

கொலஸ்ட்ரால் குறையும்

பூசணி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும் உயர் ரத்த அழுத்த பிரச்னையும் இருந்தால், அது இதயநோய்க்கு வழி வகுப்பதோடு, பக்கவாதத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்

பூசணி விதைகள் க்ளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே சர்க்கரை நோய் வராமல் இருக்க உதவும். அதற்கு தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட வேண்டும்.

உடல் எடையை குறைக்க

பூசணி விதையில் உள்ள பாஸ்பரஸ், மற்றும் கார்போஹைட்ரேட் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

ஆர்த்ரிடிஸ் நிவாரணி

பூசணி விதைகளில் ஏராளமான அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆர்த்ரிடிஸ் பிரச்னை உள்ள ஒருவர் பூசணி விதையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அது ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைப்பதோடு ஆர்த்ரிடிஸ் பிரச்னைகளில் இருந்து முற்றிலும் விடுவிக்கும். அதோடு இந்த விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூட்டுக்களின் இயக்கத்தை மேம்படுத்தி மூட்டுக்களின் அசைவில் உள்ள பிரச்னையை சரிசெய்யும்.

ஆஸ்டியோபோரோசிஸ்

முதுமைக் காலத்தில் கனிமச்சத்துKல் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஏற்படுவதுதான் ஆஸ்டியோபோரோசிஸ். பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

மனநிலைப் பிரச்னைகள்

பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை மேம்படுத்தி, மன இறுக்கத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்தான் காரணம். இந்த பைட்டோ - கெமிக்கல், ட்ரிப்போஃபேனை செரடோனினாக மாற்றி, மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மனநல பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும்.

- ஸ்ரீ தேவி குமரேசன்