Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயங்கரம்; போதையில் தாய், மகளை சரமாரியாக வெட்டிக்கொன்ற சமையல் மாஸ்டர்: கைது செய்து சிறையிலடைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (43). ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி (40), சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். மகள் சின்னம்மாள் (18) எருமியாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். போதையில் வீட்டுக்கு வரும் சுரேஷ் அடிக்கடி மனைவி ஷாலினியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக ஷாலினி வீட்டுக்கு வராமல் ஓட்டலிலேயே தங்கிக்கொண்டார். அருகே வசிக்கும் சுரேஷின் தாய் உமாராணி(63), மகனுக்கும் பேத்திக்கும் சாப்பாடு கொடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாட்டி உமாராணியின் வீட்டிலிருந்து தந்தை சுரேசுக்கு சின்னம்மாள் சாப்பாடு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, போதையில் இருந்த சுரேஷ் தகராறு செய்து அரிவாளை எடுத்து மகளை வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த உமாராணி சுரேசை தட்டிக் கேட்டுள்ளார். உடனே அவரையும் சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயமடைந்த உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வந்து சின்னம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த சுரேஷை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சின்னம்மை நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார், தாய், மகளை கொன்ற சுரேஷ் மீது கொலை வழக்குப்பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையிலடைத்தனர்.