தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாம்பன் தூக்குப் பாலத்தை நினைவு சின்னமாக்க வேண்டும்:" சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Advertisement

மண்டபம்: பாம்பன் கடலில் கட்டப்பட்டு ரயில்கள் போக்குவரத்து இயங்கி வந்த பழமையான ரயில் பாலம் தன்மையிழந்து சேதமடைந்து விட்டது. ஆதலால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து இயக்குவது சாத்தியமில்லை என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. 2018ம் ஆண்டு இந்த தகவல்கள் குறித்து ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளின் கோரிக்கையாக ராமேஸ்வரம் பகுதிக்கு நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது டெல்லி சென்ற அவர், இந்திய ரயில்வே பொறியாளர்களுடன் உடனே ஆலோசனை நடத்தினார். அதற்கு பின்னர் தான் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கும், மீண்டும் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்குவதற்கும் ரயில்வே அதிகாரிகள் முன் வந்தனர். ஆதலால் தான் ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் சேவை துவங்க முழு முயற்சி எடுத்ததற்காக அப்துல் கலாமின் பெயரை வைப்பதற்கு தொடர்ந்து மத்திய அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

பாம்பன் கடலில் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் பாலம் நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை யடுத்து 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி பாம்பன் ரயில் நிலையம் பகுதியில் நூற்றாண்டு விழா ரயில்வே நிர்வாக மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது ரயில்வே அதிகாரிகளிடம் அதிகமான மீனவர்கள் வசித்து வரும் இந்த பாம்பன் ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளில் பயன்பெறுவகையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்லும் குளிர்சாதன சரக்கு பெட்டிகளுடன் பாசஞ்சர் ரயில் பகலில் சென்னைக்கு விட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே உயர் அதிகாரிகள், கலாமின் கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் இன்று புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு மீண்டும் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் சேவை தொடங்கப்பட உள்ளது. அதனால் அப்துல் கலாமின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் பயணிகள் பாசஞ்சர் ரயில் விட வேண்டும். அதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்லும் குளிர்சாதன சரக்கு பெட்டிகளுடன் இணைத்து பாம்பன் பெயர் சூட்டப்பட்ட ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர். பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் கடலில் கப்பல்கள் கடந்து செல்லும் போது மேல் நோக்கி தூக்கும் அளவிற்கு தூக்குப்பாலம் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தில் ரயில் சேவை துவங்கப்பட்டு 110 ஆண்டுகளுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து ரயில் சேவை துவங்குவதற்கு தயாராகியுள்ளது. இதனையடுத்து கடந்த 110 ஆண்டுகளாக பல கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து கடலின் அழகே ரசித்த அளவில் வடிவமைக்கப்பட்ட தூக்குப்பாலத்தை ரயில்வே நிர்வாகம் மண்டபம் பகுதியில் கொண்டு சென்று ஒரு நினைவுச் சின்னமாகவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வடிவமைத்து பாதுகாப்பாக வைக்கவும், கூடுதலாக அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News