சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் 1,250 வீடுகள் கட்டுவதற்கு அனுமதியை அரசு வழங்கியிருந்தது ஏற்புடையது அல்ல. தற்போது உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு பணிகளை தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவமாக மழை நீரை சேமித்து நீர் அளவாக உபயோகித்திடவும், நகரம் வெப்பநிலை ஆவதை குறைத்திடவும், கடும் மழை மற்றும் புயல் காலங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவும் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ராம்சார் இடத்தில் பல அடுக்கு குடியிருப்புகளை கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.
இந்த பகுதியில் குடியிருப்புகளை ஏற்படுத்தும் போது மழை காலங்களில் அந்த குடியிருப்புகளில் இருக்கின்ற மக்களுக்கு பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கட்டப்பட்ட கட்டிடங்கள் சதுப்பு நிலத்தில் நீண்ட காலம் தாங்கி நிற்பதற்கு வாய்ப்பு இல்லை. சுற்றுச்சூழலையும் பாதுகாக்க சதுப்பு நிலப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வழி செய்ய வேண்டியது அரசின் கட்டாயமாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
