தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி

Advertisement

சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாருக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.

இதனை மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது. இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக பழனி அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி செல்வம் மீது புகார் அளித்தது.புகாரைப் பெற்ற காவல் துறையினர், கோவையைச் சார்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் செல்வக்குமார் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, "பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவலை பரப்பிய வழக்கில் நிபந்தனைகளுடன் பாஜக செல்வகுமாருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். பாஜக நிர்வாகி செல்வகுமார் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்தை உடனடியாக நீக்க வேண்டும். அத்துடன், உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்ட கருத்து என்று சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செல்வகுமார் நடந்தால் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும். வாய்ச்சொல் வீரராக இல்லாமல் நிஜத்தில் சேவைகளை செய்யவேண்டும். பாஜக பிரமுகர் செல்வகுமார் தனது செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். காவல் நிலையத்தில் தவறாமல் கையெழுத்திட வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement