இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பொருளாதார சவால்களை ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் பாகிஸ்தான் தூதுக்குழு இரண்டு முறை டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தைகள், பிராந்திய பதட்டங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது’’ என்றார்.
+
Advertisement


