கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியது. பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடந்த 2 டி20 போட்டிகளிலும் இலங்கை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சமரி அத்தப்பத்து 34 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
