Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்: 110 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 110 ரன்னுக்கு சுருண்டது.. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசஞ் இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 290 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. ஜேமி ஸ்மித் 61, காக்ஸ் 55, அட்கின்சன் 45 ரன் எடுத்தனர். ஜோஷ் டங் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 4, முகமது அலி 3, குர்ரம் ஷாஷத், அலி உஸ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் அஸன் அவெய்ஸ் ஒரு முனையில் போராட, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். பாகிஸ்தான் 37.2 ஓவரில் 110 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அஸன் அவெய்ஸ் அதிகபட்சமாக 46 ரன் (102 பந்து, 7 விக்கெட்) எடுத்தார். சவுத் ஷகீல் 16 ரன் எடுக்க, சக வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். முகமது அலி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இமாம் உல் ஹக் காயம் காரணமாகக் களமிறங்கவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் ஆலிவர் ராபின்சன் 13 ஓவரில் 6 மெய்டன் உள்பட 11 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஜோப்ரா ஆர்ச்சர் 3, ஜோஷ் டங் 2 விக்கெட் வீழ்த்தினர்.