பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் முதல் தர வீரரும், பயிற்சியாளருமான மைக் ஸ்மித் நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. 2 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள மைக் ஸ்மித், இம்மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து தனது பொறுப்பை ஏற்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்டதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை நன்கு அறிந்தவராகக் கருதப்படுகிறார்.
+
Advertisement
