புலவயோ: ஜிம்பாப்வேவின் புலவயோ நகரில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது. பாக். பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் சீட்டுக் கட்டாய் சரிந்தனர். 12.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே 57 ரன் எடுத்தது.
பின் களமிறங்கிய பாக். துவக்க வீரர்கள் ஒமெர் யூசப் 22, சயீம் அயூப் 36 ரன்களை அவுட்டாகாமல் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். 5.3 ஓவரில் பாக். ஸ்கோர் 61 ஆக இருந்தது. 5 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்திய சுபியான் முகீம் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

