கரூர் : கரூர் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒவியப் போட்டி நடைபெற்றது.கரூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு கடல் வாழ் உயிரினங்கள் என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வன விலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பிலும் ஒவியப் போட்டி நடைபெற்றது.இந்த போட்டிகளில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நடுவராக ராஜூ என்பவர் செயல்பட்டார்.இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளூககு பரிசுப் பொருட்களும், கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சாய் ஷங்கர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
