இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் 6 மாத ஊதியத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 65
உதவித் தொகை: மாதம் ரூ.30 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு.
தகுதி: இயற்பியல்/வேதியியல்/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல்/மெட்டீரியல் சயின்ஸ்/குவாண்டம் டெக்னாலஜி/லேசர் ஆப்டிக்ஸ்/செமி கண்டக்டர் டிவைஸ் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் அல்லது எம்இ.,/எம்டெக்., பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவராக இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2026.


