திருநெல்வேலி: நெல்லையில் தெரு நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஐயப்பன் என்பவர் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதியில் நடந்து வரும் பொழுது ஒரு தெருநாய் அவரை கடித்துள்ளது. இதனை அடுத்து அதை சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்த இந்த வாலிபருக்கு உடல்நலம் மோசமாகியுள்ளது. இதனை அடுத்து சிகிச்சை பெறுவதற்காக கன்னியாகுமாரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவர் பரிசோதித்த டாக்டர்கள் ரேபிஸ் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை அளிக்க வந்த இரண்டு டாக்டரை அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரேபிஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தெருநாய் பிரச்சனையை உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
