மாட்டுப்பட்டி அணை பகுதியில் படையப்பா ‘சர்ப்ரைஸ் விசிட்’
Advertisement
கடந்த ஒரு வாரமாக தலையாறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்த படையப்பா யானை, தற்போது மாட்டுப்பட்டி அணை பகுதியில் நடமாடி வருகிறது. நேற்று மாட்டுப்பட்டி அணை அருகே படையப்பா யானை தண்ணீர் பருக வந்துள்ளது.
அப்போது, அணையில் படகு சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் யானை தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசித்தனர். மேலும், புகைப்படம், வீடியோவாக எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
Advertisement