தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உரிமையாளர் வெளியே சென்றதை நோட்டமிட்டு பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருட்டு

Advertisement

*திருவட்டார் அருகே பரபரப்பு

குலசேகரம் : திருவட்டார் அருகே சவுண்ட் சர்வீஸ் கடையின் உரிமையாளர் வெளியே சென்றதை நோட்டமிட்ட 2 கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்து ஆம்பிளிபயரை திருடிக்கொண்டு தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த காட்சியை சிசிடிவி கேமராவில் பார்த்த உரிமையாளரின் மனைவி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

திருவட்டாரை அடுத்த பூவன்கோடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே வசித்து வருபவர் கிங்ஸ்லி (52). இவரது வீட்டையொட்டி ஒலி-ஒளி சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். பிரபலமான இந்த கடையில் ஆம்பிளிபயர், ஸ்பீக்கர்கள், சீரியல் செட்டுகள் உள்பட விலையுயர்ந்த உபகரணங்கள் ஏராளமாக உள்ளன.

நேற்றுமுன்தினம் மாலை சுமார் 3 மணியளவில் கிங்ஸ்லி கடைக்குள் இருந்தபோது அந்த வழியாக 2 வாலிபர்கள் பைக்கில் சுற்றித்திரிந்தனர். ஒருகட்டத்தில் கிங்ஸ்லி நடத்திவரும் கடையின் எதிர்ப்புறம் நின்று கொண்டு கடையை பார்த்தவாறு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மற்றொரு நபர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார். நீண்டநேரமாக அங்கு நின்று கொண்டிருந்ததால் கிங்ஸ்லிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் டிப்-டாப் உடையணிந்திருந்ததால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து கிங்ஸ்லி கடையில் இருந்து பக்கத்தில் உள்ள வேறொரு கடைக்கு சென்றார்.

இதனை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த மர்ம நபர்கள் இருவரும் உடனே பைக்கை எடுத்துக்கொண்டு கிங்ஸ்லியின் கடை அருகே வந்தனர். அதில் பைக்கை ஓட்டிய நபர் ஹெல்மெட்டை பின்னால் இருந்தவரிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த நபர் ஹெல்மெட்டை வாங்கி தலையில் போட்டுக்கொண்டு கடைக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ஆம்பிளிபயரை அலேக்காக தூக்கிவிட்டு ஓடிவந்தார்.

இந்த காட்சி கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதே நேரத்தில் கிங்ஸ்லியின் வீட்டில் இருந்த மனைவி இந்த காட்சியை தனது வீட்டில் இருந்தவாறு பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.அதற்குள் மர்ம நபர்கள் இருவரும் பைக்கில் ஏறி மின்னல்வேகத்தில் தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நாலாபுறமும் தேடிப்பார்த்தும் கொள்ளையர்கள் சிக்கவில்லை. இதுகுறித்து கிங்ஸ்லி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் சவுண்ட் சர்வீஸ் கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News