மதுரை: வங்கியில் பெரும் தொகையை கடன் பெற்று, செலுத்தாதவர்கள் மீது வங்கி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சாதாரண மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடன் வாங்கியவரின் சொத்து மீது உரிமை கோரி கனரா வங்கியால் அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த எழில் மஞ்சு ப்ரீத்தி என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisement


