Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்ட அளவில் குழு அமைப்பது தொடர்பாக அரசாணை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்ட அளவில் குழு அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசாணையை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி அறிக்கை தர அவகாசம் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. கோயில் நிலத்துக்கும் தனக்கும் பாதுகாப்பு வழங்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் அரசின் பதிலை ஏற்று வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.