ஆர்டர் செய்த தோசை, ஊத்தப்பம் ‘மிஸ்ஸிங்’ பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஆனால் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் தோசையும், ஊத்தப்பமும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால், மேலும் ஆத்திரம் அடைந்த அவர் திருவள்ளூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விசாரணையில், டெலிவரி நிறுவனம் தரப்பில் வாதிடும்போது உணவகத்துக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே தாங்கள் இடைத்தரகர் போல் செயல்படுகிறோம், ஆர்டர் செய்த உணவை சம்பந்தப்பட்ட ஓட்டலில் இருந்து வாங்கி கொடுப்பதோடு எங்கள் வேலை முடிந்து விடுகிறது. பார்சல் போட்டு தருவது ஓட்டல் நிர்வாகம் தான். அதற்குள் இருக்கும் உணவுகளின் தரம் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க முடியாது. இந்த வழக்கில் ஓட்டல் நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும் என வாதிட்டனர். இதை ஏற்க நுகர்வோர் கோர்ட் தலைவர் லதா மகேஸ்வரி மறுத்துவிட்டார்.
வாடிக்கையாளரிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.73 வசூலித்து இருக்கிறீர்கள். எனவே சேவை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை சரி செய்யும் பொறுப்பு உங்கள் நிறுவனத்திற்கு உண்டு. மனுதாரரின் ஒப்பந்தம் உங்கள் நிறுவனத்துடன் நேரடியாக இருக்கிறது. அதற்கான சேவை கட்டணத்தையும் வழங்கி இருக்கிறார். எனவே உணவகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க முடியாது. உணவுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.498ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்காக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.