சென்னை: தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா? என விசாரித்து நவ.16ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு அளித்துள்ளது. 17 கைதிகளையும் நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் விசாரிக்க உத்தரவு அளித்துள்ளது. கடலூர், மதுரை, சேலம், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கும் உத்தரவு. கைதிகளின் உடலில் காயங்கள் உள்ளதா என்பதை சரிபார்த்து நவம்பர் 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை
+
Advertisement


