போடி: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து நேற்று முன்தினம் இரவு, ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இதுகுறித்து கலந்து பேசிவிட்டு சொல்கிறேன்’’ என்றார். நேற்று போடி எம்எல்ஏ அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது செய்தியாளர்கள், ‘‘அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர்.
உங்களின் கருத்து என்ன’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘‘ நான் நாளை(இன்று)சென்னை செல்கிறேன். அங்கு முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்து ஆலோசனை செய்து எனது முழுமையான கருத்தை அனைவரிடமும் தெரிவிப்பேன்’’ என்றார்.
