Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தையும் போயிடுச்சு... தடுமாறும் ஓபிஎஸ்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தொடர்ச்சி யாக பேசிவந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது தை மாதம் முடிவடைந்தும் இன்னும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார். என்டிஏ கூட்டணி அல்லது தனிக்கட்சி வாய்ப்புகள் குறித்து ஓபிஎஸ் ஆலோசித்த நிலையில், ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து விலகுவதால், என்ன முடிவெடுப்பது என்று ஓபிஎஸ் தாமதம் செய்துவருகிறார்.

தேர்தல் வேலையில் அனைத்துக்கட்சியினரும் பிசியாக உள்ள நிலையில் தனது ஆதரவாளர்களிடம், ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இன்னும் காலம் இருக்கிறது’ என சொல்லிவருகிறாராம். குழப்பத்தில் இருக்கும் அவர் கோயில் கோயிலாக சுற்றி வருவதை தற்போது வழக்கமாக வைத்துள்ளாரம். இந்த சட்டசபைத் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடவில்லை என்றால், அவரின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும். இடியாப்ப சிக்கலில் இருக்கும் அவரை தொடர்ந்து தற்போது அவரது அவரது மகன் ரவீந்திரநாத்தும் கோயில் கோயிலாக வலம் வர தொடங்கியுள்ளாராம். திருச்சிக்கு ரகசியமாக வந்த ரவீந்திரநாத், திருவானைக்காவல் கோயிலில் தரிசனம் செய்ததாக தெரிகிறது. ரவீந்திரநாத் வருகை அவரது நெருங்கிய வட்டாரத்துக்குக் கூட தெரியவில்லையாம். அந்த அளவுக்கு ரகசியமாக இருந்ததாம்...