பணி: கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)- (ஸ்போர்ட்ஸ் கோட்டா- 2026).
விளையாட்டு வாரியாக காலியிடங்கள் விவரம்: (ஆண்களுக்கும், பெண்களுக்கும் சேர்த்து)
வில்வித்தை- 14, அதலெடிக்ஸ்- 42, அகுவாடிக்ஸ்-14, குத்துச்சண்டை-18, கூடைப்பந்து-21, பேட்மிண்டன்-6, சைக்கிளிங்-4, இக்கோஸ்ட்ரீயன்-5, பென்சிங்-10, கால்பந்து-22, ஜிம்னாஸ்டிக்ஸ்-4, ஹாக்கி-28, கைப்பந்து-16, ஜூடோ-12, கபடி-12, கராத்தே-14, காயக்கிங் மற்றும் கனோயிங்-27, பென்காக் சிலாட்-16, பவர் லிப்டிங்-13, துப்பாக்கி சுடுதல்-4, டேபிள் டென்னிஸ்-6, டேக்வோண்டோ-16, வாலிபால்-14, மல்யுத்தம்-27, வுஷ்ஷூ-16, பளு தூக்குதல்-13, யோகா-6.
சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.
வயது: 18 முதல் 23க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் ஜூனியர் அல்லது சீனியர் பிரிவு போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3வது இடமாவது வென்றிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட விளையாட்டில் விண்ணப்பதாரரின் சாதனைகள், உடற்தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ., உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினருக்கு 2.5 செ.மீ., சலுகை தரப்படும். மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., அகலமும் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசி யினர் மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.recruitment.ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2026.


